விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! |

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதே தேதியில் ரஜினியின் வேட்டையன் ரிலீஸ் என்று பின்னர் அறிவிக்கப்பட்டதால், கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் அபிஷேக் பச்சன், ஹிருத்திக் ரோஷன், அமீர்கான் ஆகியோர் நடிப்பில் மூன்று பாகங்களாக வெளியான தூம் என்ற படத்தின் நான்காம் பாகம் அடுத்து உருவாகிறது. இந்த படத்தில் சூர்யா வில்லனாக நடிக்கப் போவதாக பாலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து விட்டதாகவும், விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.