2025 பொங்கல் போட்டியில் என்னென்ன படங்கள் ? | பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா | சங்கராந்தி தினத்தில் ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' | இட்லி கடை படப்பிடிப்பு தளத்தில் இருந்து லீக்கான வீடியோ | ராம்கோபால் வர்மா - பஹத் பாசில் சந்திப்பு : பின்னணி என்ன ? | கேரள மலைப்பகுதிகளில் கேஷுவலாக ஜாக்கிங் போகும் விஜய் தேவரகொண்டா | 4 மணிநேர காத்திருப்பு : ஸ்ருதிஹாசனை அவதிக்குள்ளாக்கிய விமான நிறுவனம் | புதிய பிரபஞ்சம் உருவானாலும் அங்கேயும் ரஜினி ஒருவர்தான் : ரித்திகா சிங் பிரமிப்பு | மாமனார் அமிதாப்புக்கு தாமதமாக வாழ்த்து சொன்ன ஐஸ்வர்யா ராய் | எனக்கு தொழில் ரொமான்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படத்தில் ரஜினி ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. திரையரங்குகளில் வெளியான இந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை.
இந்த படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க் தொலைந்து விட்டதால் சில காட்சிகளை இணைக்க முடியவில்லை. அதுவே தோல்விக்கு காரணம் என்பது போன்று ஐஸ்வர்யா ரஜினி கூறி வந்தார். அதோடு அந்த ஹார்ட் டிஸ்க் கிடைத்த பிறகுதான் லால் சலாம் படத்தை ஓடிடியில் வெளியிடுவோம் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது லால் சலாம் படம் முற்றிலும் மாறுபட்ட பதிப்பாக விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினி. அதோடு தொலைந்து போன காட்சிகளில் இருந்து சிலவற்றை மட்டுமே மீட்டெடுக்க முடிந்தது. அவற்றை எடிட் செய்து புதிய லால் சலாமை உருவாக்கி இருக்கிறோம். அந்த காட்சிகளுக்கு ஊதியமே வாங்காமல் இசையமைத்து கொடுத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அதனால் ஓடிடியில் வெளியாகும் லால் சலாம் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.