2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

இயக்குநர் விவேக் ஆத்ரேயா, டிவிவி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாரான படம் ‛சூர்யாவின் சனிக்கிழமை'. தெலுங்கு, தமிழில் தயாரான இப்படம் மற்ற மொழிகளிலும் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி வெளியானது. நானி, பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சாய் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். முரளி.ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், முதல்நாளில் உலகம் முழுவதும் ரூ.25 கோடி வசூலித்திருந்தது. இந்நிலையில், 'சூர்யாவின் சனிக்கிழமை' ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.