காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே அவர் தனது தந்தை அருண்பாண்டியனுடன் 'அன்பிற்கினியாள்' என்ற படத்தில் இணைந்து நடித்தார். இதில் இருவரும் தந்தை மகளாகவே நடித்தனர். இது மலையாளத்தில் வெளிவந்த 'ஹெலன்' என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்த நிலையில் மீண்டும் அருண் பாண்டியனும் கீர்த்தி பாண்டியனும் இணைந்து நடிக்கிறார்கள்.
இயக்குநர் உதய் கே இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு 'அஃகேனம்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் பிரவீண் ராஜா, ஆதித்யா ஷிவ்பிங்க், ரமேஷ் திலக், ஜி. எம். சுந்தர், ஆதித்யா மேனன், சீதா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்னேஷ் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைக்கிறார். ஏ அண்ட் பி குரூப்ஸ் நிறுவனம் சார்பில் அருண் பாண்டியன் தயாரிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் உதய் கூறும்போது ''அஃகேனம் என்பது தமிழில் ஆயுத எழுத்தை குறிக்கும். படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகம், பாண்டிச்சேரி தவிர்த்து வட இந்தியாவிலுள்ள சில முக்கியமான பகுதிகளிலும் நடைபெற்றது. இப்படத்தின் பின்னணி இசை சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ஐரோப்பிய நாடுகளில் உள்ள பிரபலமான இசை அரங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அத்துடன் இந்தத் திரைப்படத்தில் தேசிய அளவில் விருது பெற்ற ஓடிஸி நடன மேதை கங்காதர் நாயக் மற்றும் அவரது குழுவினருடன் ஏராளமான வட இந்திய நாட்டிய கலைஞர்களும் இப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சியில் நடனமாடி இருக்கிறார்கள். 'அஃகேனம்' திரைப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும்'' என்றார்.