அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
முரளி, ராதா மற்றும் வடிவேலு இணைந்து நடித்து 2002ம் ஆண்டு வெளியான 'சுந்தரா டிராவல்ஸ்' படம் காமெடி காட்சிகளுக்காக பெரும் வெற்றி பெற்றது. யுவஸ்ரீ கிரியேஷன் சார்பில் எஸ்.வி. தங்கராஜ் தயாரித்திருந்தார் தாஹா இயக்கியிருந்தார்.
தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு "சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட்" என்று தலைப்பிட்டுள்ளனர். கருணாஸ் மற்றும் கருணாகரன் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள் மற்றும் ஆடுகளம் முருகதாஸ், சாம்ஸ், ரமா, வின்னர் ராமச்சந்திரன், சிசர் மனோகர், டெலிபோன் மணி, வினோத் குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். இளம் ஜோடிகளாக விக்னேஷ் - அஞ்சலி இருவரும் அறிமுகமாகிறார்கள்.
செல்வா ஒளிப்பதிவு செய்கிறார். முதல் பாகத்தை தயாரித்த எஸ்.வி தங்கராஜ் தயாரிக்கிறார், ஹரிஹரன் இசையமைக்கிறார். கருப்புத் தங்கம் என்ற புதுமுகம் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது "இந்த கதையில் பஸ் தான் ஹீரோ. அதை மையப்படுத்தி தான் அனைத்து கதாபாத்திரங்களையும் உருவாக்கி இருக்கிறோம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் அந்த பஸ்சை பல லட்சம் ரூபாயில் சொந்தமாக வாங்கி அதை படத்திற்கு ஏற்றார் போல தயார்படுத்தி படப்பிடிப்பை நடத்தி வருகிறோம்.
கொடைக்கானல், பன்றிமலை போன்ற இடங்களில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளிலும், தென்காசி, காரைக்குடி மற்றும் சென்னை நெல்லிக்குப்பம் போன்ற பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது" என்றார்.