தாடி பற்றிய விமர்சனம் ; தொடரும் டீசரில் பதில் சொன்ன மோகன்லால் | நீதிமன்றம் செல்வதை புறக்கணித்து விட்டு சினிமா பிரிவியூ பார்க்க சென்ற நடிகர் தர்ஷன் | அஜித் மகனாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணினேன் ; பிரேமலு ஹீரோ வருத்தம் | அஜித்தின் 'குட் பேட் அக்லி'யால் காத்து வாங்கும் வீர தீர சூரன்! | சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்தாண்டு வெளியான படம் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம்' (சுருக்கமாக 'தி கோட்'). மீனாட்சி சவுத்ரி, சிநேகா, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
படம் வெளியானதும் வசூல் நிலவரம் குறித்து அவ்வப்போது தயாரிப்பு தரப்பில் இருந்து போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. இறுதியாக படம் ரூ.450 கோடி வசூலித்ததாகவும் சொன்னார்கள். தற்போது ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டிராகன்' படம் நாளை மறுநாள் (பிப்.,21) வெளியாகிறது. இதன் புரமோஷனுக்காக ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேட்டியளித்து வருகிறார்.
அவரிடம் 'தி கோட்' பட வசூல் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அர்ச்சனா கூறியதாவது: தி கோட் திரைப்படம் ரூ.450 கோடி வசூல் என்று பலரும் கூறி வருகின்றனர். அதில் திரையரங்கைத் தாண்டி உள்ள வியாபாரம் எதுவும் சேர்க்கப்படவில்லை. அதையும் சேர்த்தால் பெரிதாக இருக்கும்.
நாங்கள் சொன்னது, திரையரங்க மொத்த வசூல் மட்டுமே. அதிலிருந்து வரியை எல்லாம் கழித்து கணக்கிட வேண்டும். பெரிய படங்களுக்கு வெளியீட்டுக்கு முன்பே திரையரங்க வசூலைத் தாண்டிய அனைத்து வியாபாரமும் பெரிய உறுதுணையாக இருக்கும். அதில் இருந்தே பெருவாரியான பணத்தை எடுத்துவிட முடியும். திரையரங்க வசூலில் இருந்து வரும் பெரும்பாலான தொகை லாபமாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.