அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அசோக் செல்வனை, நடிகை கீர்த்தி பாண்டியன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் சபாநாயகன் மற்றும் கீர்த்தி பாண்டியன் கதையின் நாயகியாக நடித்திருக்கும் கண்ணகி ஆகிய இரண்டு படங்களும் வருகிற டிசம்பர் 15ம் தேதி திரைக்கு வருகிறது. இதனால் அவர்கள் இருவருமே தங்களது படங்களின் பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கீர்த்தி பாண்டியன் அளித்த ஒரு பேட்டியில், நான் நீண்ட காலமாகவே ஒல்லியாக இருந்தேன். அதோடு கருப்பாகவும் இருந்தேன். காரணம் நான் எப்போதுமே வெயிலில் தான் சுற்றிக் கொண்டிருப்பேன். அப்போது என்னுடைய தோற்றத்தை பற்றியும் நிறத்தை பற்றியும் எதிர்மறையான விமர்சனங்கள் வந்தபோது கவலையில் அழுதேன். ஆனால் இப்போது அதைப் பற்றி யோசித்துப் பார்த்தால் அந்த காலகட்டத்திற்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.