முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் | படையப்பா ரீ ரிலீஸில் வசூல் எவ்வளவு தெரியுமா? | ஆர்யா 40வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் கபடி அணியின் துணை கேப்டனாக சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த காத்திகா இருந்தார். ஈரான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இதனால் கார்த்திகாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிதியும், பாராட்டும் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் கார்த்திகா மற்றும் அவரது கபடி குழுவினரின் சாதனைகளையும், கபடி விளையாட்டின் உணர்வையும் கொண்டாடும் வகையில் பைசன் படக்குழுவின் சார்பாக கார்த்திகாவிற்கு 5 லட்சமும், கண்ணகி நகர் கபடிக்குழுவிற்கு 5 லட்சமுமாக 10 லட்சத்திற்கான காசோலையை இயக்குநர் மாரி செல்வராஜ் கார்த்திகாவின் கண்ணகி நகர் வீட்டுக்கு சென்று வழங்கினார்.
'பைசன்' படம் அடிமட்டத்திலிருந்து தேசிய அங்கீகாரத்திற்கு உயர்ந்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரான மணத்தி கணேசன் வாழ்க்கை கதை என்பது குறிப்பிடத்தக்கது.