ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
யஸ்வந்த் கிஷோர் என்பவர் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் கண்ணகி. வருகிற டிசம்பர் 15ம் தேதி வெளியாகும் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. திருமணம், விவாகரத்து, லிவிங் ரிலேஷன்ஷிப் ஆகியவற்றின் தொகுப்பாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இதில் ஒரு கர்ப்பிணி கதாபாத்திரத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள நிலையில், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா ஆகியோரும் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்துள்ளார்கள்.
கலை, நேத்ரா, நதி, கீதா என்ற நான்கு பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த நான்கு பெண்களின் வாழ்வில் வரும் ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கை போராட்டமே இந்த படத்தின் கதைக்களம் என டிரைலரை பார்க்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக டிரைலரில் கர்ப்பிணியாக வரும் கீர்த்தி பாண்டியன், தனது வயிற்றில் இருக்கும் குழந்தையை அடிப்பது போன்று காட்சி அதிர்ச்சியாக அமைந்துள்ளது.