அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

அறிமுக இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இயக்கும் படம் கண்ணகி. இதில் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா, கீர்த்தி பாண்டியன் ஆகிய 4 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர வெற்றி, ஆதிஷ் நடிக்கிறார்கள். ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய ஷான் ரகுமான் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் கிஷோர் கூறியதாவது: வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் வெவ்வேறு தளங்களில் வாழும் பெண்கள் என்ன மாதிரியான முடிவை எடுக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் பெண் பார்த்தல் என்கிற வைபவம் ரொம்பவே முக்கியமானது. பெண் பார்க்க வரும் மணமகன்களில் ஒருவர் என்ன காரணங்களால் நிராகரிக்கப்படுகிறார், இன்னொருவர் எந்த அடிப்படையில் மணமகனாக ஏற்கப்படுகிறார். இந்த நிகழ்வில் ஒரு மணப்பெண்ணுக்கே உரிய கட்டுப்பாடுகளும், எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் எப்படி இருக்கின்றன என்பதை ஒரு பாடலின் வழியாக சொல்லியிருக்கிறோம். இந்த பாடல் மக்களால் கவனிக்கப்படும். என்றார்.