23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை |
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை அடுத்து லவ் டுடே படத்தை இயக்கி, நடித்த பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து தனது அடுத்த படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்த நிலையில், தற்போது லியோ படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ள இந்த படத்திற்கு ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்பதை சுருக்கி ‛எல்ஐசி' என்று டைட்டில் வைக்க முடிவு செய்துள்ளார் விக்னேஷ் சிவன். மேலும், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை ஒருவரிடத்தில் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படும் நிலையில், எஸ். ஜே. சூர்யா, மிஷ்கின் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது நயன்தாராவும் இந்த படத்தில் இணைந்திருக்கிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் அக்கா வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, நானும் ரவுடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல் என விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்துள்ள நயன்தாரா மூன்றாவது முறையாக இப்படத்தில் நடிக்கப் போகிறார்.