என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
அதிக விளம்பரத்தை விரும்பாமல் சினிமாவில் நடிப்பது தனது தொழில் என்கிற ரீதியில் எத்தனையோக கலைஞர்கள் வாழ்ந்து விட்டு போயிருக்கிறார்கள். அப்படியானவர்களில் ஒருவர் கே.ஆர்.இந்திராதேவி. பிரபல டப்பிங் கலைஞரான அனுராதாவின் மூத்த சகோதரி, ஜெயகீதாவின் தாய்.
1952ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்தார். 14 வயதில், சென்னைக்கு வந்தார். நாடகக் குழுவில் சேர்ந்து, மேடை நாடகங்களில் நடிப்பைத் தொடங்கினார். பின்னர் அவர் திரைப்படத் துறையில் துணை நடிகையாகவும், டப்பிங் கலைஞராகவும் பணியாற்றினார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
1959ல் 'கண் திறந்தது' என்னும் படத்தில் ஏ.கருணாநிதிக்கு ஜோடியாக நடித்தார். ஆர்.எஸ்.மனோகர் மற்றும் மனோரமா நடித்த 'கொஞ்சும் குமரி' என்னும் படத்தில் இவரும் மனோரமாவிற்கு இணையான கேரக்டரில் நடித்தார். 'பெற்றால் தான் பிள்ளையா' படத்தில் நம்பியாருக்கு ஜோடியாக நடித்தார். 'சுமைதாங்கி'யில் ஜெமினி கணேசனுக்கும், 'ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்' படத்தில் எம்.ஆர்.ராதாவிற்கும் ஜோடியாக நடித்தார்.
கடைசியாக 2005ம் ஆண்டு 'கிரிவலம்' படத்தில் நடித்தார். பின்னர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். 2017ம் ஆண்டு தனது 70வது வயதில் காலமானார்.