சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
காமெடி நடிகராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய யோகி பாபு அதன் பிறகு படங்களில் ஹீரோவாக நடித்தார். இப்போது வெப் சீரிசிலும் ஹீரோவாக நடிக்கிறார். அழகிய தீயே, மொழி, அபியும் நானும், காற்றின் மொழி, உப்பு கருவாடு, பொம்மை படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கும் வெப் தொடர் 'சட்னி சாம்பார்'.
யோகி பாபுவுடன் வாணி போஜன் இணைந்து நடித்துள்ளார். இவர்கள் தவிர கயல் சந்திரமவுலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் நிழல்கள் ரவி, மைனா நந்தினி, தீபா சங்கர், சம்யுக்தா விஸ்வநாத், ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோரும் நடித்துள்ளார். குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், அஜேஷ் இசை அமைத்துள்ளார். இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படைப்புகள் மூலம் புகழ் பெற்ற எழுத்தாளர் பொன் பார்த்திபன் வசனங்களை எழுதியுள்ளார். ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. காமெடி கலந்த குடும்ப பொழுதுபோக்கு தொடராக உருவாகி உள்ளது.