ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? |
விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது. 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ள இந்த படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ளனர். இதில், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ், அபிராமி, முனிஸ் காந்த், சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர், ஏ.எல் தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படம் கடந்த 14ம் தேதி வெளியானது. படத்தின் வெற்றிக் கொண்ட்டாட்டத்தை படக்குழுவினர் கடந்த 19ம் தேதி கொண்டாடினர். இந்நிலையில் படத்தின் வசூல் குறித்து படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடைசியாக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி படம் வெளியான ஒரு வாரத்தில் 55 கோடியே 8 லட்சம் வசூலித்துள்ளதாக அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது. இதன் மூலம் மஹாராஜா 50 கோடி கிளப்பில் இணைந்துள்ளார்.