25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி | ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவாகும் 'தி ஒன்' | சலீம் குமார் இறுதி சடங்கில் யு டியூப்பர்கள் அட்டகாசம் : போலீஸ் எச்சரிக்கை | ஆர்த்தி ஜீவனாம்சத்திற்கு காலக்கெடு கேட்ட ரவி மோகன் வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : 2 தமிழ் படங்களில் மட்டும் நடித்த சத்யன் | ரூ.300 கோடி வசூலை தாண்டியது ‛பெத்தி' | ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் |

இளையராஜா கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் வந்தது போன்று கே.வி.மகாதேவன் திரையிசையில் கோலோச்சி கொண்டிருந்த காலத்தில் வந்தவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி. காலத்தால் அழிக்க முடியாத பல காவியப் பாடல்களைத் தன் இசையமைப்பில் அளித்தவர் கே.வி.மகாதேவன். ஒரு கட்டத்தில் மாகாதேவனுக்கு வாய்ப்புகள் குறைந்து விஸ்நாதன் - ராமமூர்த்திக்கு அந்த வாய்ப்புகள் சென்றன.
இந்த நிலையில் கே.வி.மகாதேவன் இசையமைப்பில் வெளியான படங்களில் நடித்த எம்ஜிஆர் தனது அடுத்த படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதனை இசை அமைக்கச் சொல்லி அணுகினார். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் ஆசைதான். ஆனால் அவர் தன் தாயிடம் இதுபற்றி கூறிய போது அவரது தாயார் விஸ்வநாதன் கன்னத்தில் பளார் என்று அரைந்தாராம். "மகாதேவன் தொடர்ந்து இசையமைக்கும் கம்பெனிகளுக்கு நீயேன் இசையமைக்க ஒப்புக் கொள்கிறாய்? அது கூடாது, அவர் இசை உலகின் மாகாதேவன், அவரை உன்னால் வெல்ல முடியாது, ஆனாலும் முயற்சி செய்” என்றாராம்.
இந்த தகவலை எம்.எஸ்.விஸ்வநாதன் மேடை நிகழ்ச்சி ஒன்றில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அப்படிப்பட்ட கே.வி.மகாதேவனுக்கு இன்று 23வது நினைவு நாள்.