ஓணம் வாழ்த்து எதிரொலி - கடும் விமர்சனத்தில் சிக்கிய விஜய்! | ராகவா லாரன்ஸின் 25வது படத்தை இயக்கும் தெலுங்கு பட இயக்குனர்! | அமரன் படத்தின் டப்பிங் பணிகளைத் முடித்த சிவகார்த்திகேயன்! | பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் வரிசைக்கட்டும் படங்கள்! | சிம்புவிற்கு பதிலாக சிவகார்த்திகேயன் தி கோட் படத்தில் நடந்த மாற்றம்! | லெஜண்ட் சரவணன் படத்தில் இணைந்த பிரபலங்கள்! | காதலரை கரம்பிடித்த மேகா ஆகாஷ்: சென்னையில் எளிய முறையில் நடந்த திருமணம் | மக்களின் ஆதரவு உற்சாகப்படுத்துது...!: சந்தோஷத்தில் சஞ்சனா | போதை மறுவாழ்வு மையத்தில் ஸ்ரீகுமார் அட்வைஸ்! | பெண் குழந்தைக்கு தாயான ரித்திகா! |
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி உள்ள இவர், 2026 சட்டசபை தேர்தலில் களம் காண உள்ளார். அதன் முன்னோட்டமாக தொடர்ந்து அரசியல் மற்றும் பொதுநலன் சார்ந்த விஷயங்களில் தனது பங்களிப்பை செய்து வருகிறார்.
கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் என்ற பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 52 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேற்று விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். நாளை(ஜூன் 22) விஜய்யின் 50வது பிறந்தநாள், இதை அவரது ரசிகர்கள் விமரிசையாக கொண்டாட தயார் ஆனார்கள். ஆனால் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என கூறி விட்டார் விஜய்.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பில், ‛‛தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்குத் தலைவர் விஜய், தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
எனவே கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்''.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.