ஐமேக்ஸில் ஜெயிலர் 2 | ஜூன் 1ல் இளையராஜாவின் ‛சிம்பொனி' வெளியீடு | ஜூலையை குறிவைக்கும் ‛டயங்கரம்' | 'பெத்தி' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | பரிமளா அண்ட் கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா...? | 19 ஆண்டுகளுக்கு பின் ஜீவா, அஞ்சலி கூட்டணி | கர்ணபரம்பரையாக கேட்டு மகிழ்ந்த “கண்ணகி” கதையின் கலையுலக சாதனை | ‛கருப்பு 300' கோடி வசூலிக்குமா?, மூக்குத்தி அம்மன் 3 உருவாகுமா? | கீர்த்தி சுரேஷின் ‛ரப்தார்' ரிலீஸ் தேதி மாற்றம் | 'பெத்தி' படத்திற்கு வந்த புதிய சிக்கல் |

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் 'தி கோட்'. இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் நாளை(ஜூன் 22) விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சின்ன ட்ரீட் என “சின்ன சின்ன கண்கள்..” என்ற பாடல் நாளை வெளியாகப் போகிறது. இதனை நடிகர் விஜய்யும், மறைந்த பின்னணி பாடகி பவதாரிணியும் பாடி உள்ளனர். பவதாரிணியின் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பாட வைத்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
இப்படத்தின் முதல் சிங்கிளான 'விசில் போடு' பாடல் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியானது. கலவையான விமர்சனங்கள் வந்த அந்தப் பாடல் யு டியுப் தளத்தில் 59 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இரண்டாவது சிங்கிள் முதல் சிங்கிளை விட அதிகப் பார்வைகளை ஈர்க்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது.




