பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

தமிழில் காக்கா முட்டை என்ற படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். என்றாலும் அதன்பிறகு அதுபோன்ற வேடங்களில் நடிக்காமல், ஹீரோயின் வேடங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் சில படங்களில் கதையின் நாயகியாகவும் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷிற்கு சமீபகாலமாக தமிழில் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதால், தனது தாய் மொழியான தெலுங்கில் அதிகப்படியான கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். தற்போது தமிழில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மோகன்தாஸ் மற்றும் கருப்பர் நகரம் போன்ற படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், இதையடுத்து தெலுங்கில் அணில் ரவிப்புடி இயக்கும் படத்தில் சீனியர் நடிகர் வெங்கடேஷின் மனைவி வேடத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார்.




