2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

விஜய் சேதுபதி நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் மகாராஜா. இந்த படத்தில் அவருக்கு மகளாக சஞ்சனா நடித்திருந்தார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறுகையில், இந்த படத்தில் நான் நடிக்க தொடங்கியதிலிருந்தே என்னை ஒரு நிஜ மகள் போலவே நினைத்து பழகினார் விஜய் சேதுபதி. அவருடைய சாப்பாட்டை கூட எனக்கு கொடுப்பார். அதனால் நானும் அவரை எனது அப்பா போலவே நினைத்தேன். படப்பிடிப்பு இல்லாத நேரங்களிலும் இப்படி அப்பா மகள் போலவே நாங்கள் பழகினோம். இதன் காரணமாகவே இந்த படத்தில் சென்டிமெண்ட் காட்சிகள் சிறப்பாக வெளிப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு நான் வெளியில் சென்றால் மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த பெண் தானே நீங்கள், நன்றாக நடித்திருந்தீர்கள் என்று சொல்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த படம் எனக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது என்கிறார் சஞ்சனா.