ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' |
ஒரு படம் வெளிவருவதற்கு முன்பு விளம்பரத்திற்காக யு-டியூப் சேனல், சேனல் ஆகப் போய்ப் பேசுவதை சில இயக்குனர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் 'கூலி' படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசியதை, ரஜினிகாந்த்தே கொஞ்சம் கிண்டலடித்துப் பேசியிருந்தார்.
ஹிந்தியில் சல்மான் கான் நடித்த 'சிக்கந்தர்' படத்தை இயக்கி படுதோல்வி அடைந்த ஏஆர் முருகதாஸ் அடுத்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மதராஸி' படத்தை இயக்கியுள்ளார். இப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்காக இப்போதே யு டியூப் சேனல், சேனல் ஆகப் போய்ப் பேசி வருகிறார். அவற்றில் சர்ச்சைக்குரிய சில கருத்துக்களையும் பேசியுள்ளார்.
சல்மான் நடித்த 'சிக்கந்தர்' படத்தின் தோல்வி குறித்துப் பேசுகையில் “சல்மான் தினமும் இரவு 8 மணிக்குத்தான் படப்பிடிப்புக்கு வருவார். அவருக்குக் கொலை மிரட்டல் இருந்த காரணத்தால் ஸ்டுடியோவுக்குள்ளேயே படப்பிடிப்பை நடத்தினோம்,” என்றெல்லாம் சில காரணங்களை அடுக்கினார்.
இது சல்மான் ரசிகர்களை கோபப்பட வைத்துள்ளது. பட வெளியீட்டிற்கு முன்பாக சல்மானைப் பற்றிப் புகழ்ந்து பேசினார் முருகதாஸ். அந்தப் படத்தின் தோல்விக்கு அவருடைய திரைக்கதைதான் காரணம். தோல்வியை ஏற்க மனமில்லாமல் சல்மான் மீது தேவையற்ற விமர்சனங்களை வைக்கிறார். ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' என கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள். இவை அனைத்தையும் வட இந்திய ஊடகங்கள் அப்படியே செய்தியாக வெளியிட்டுள்ளன.
ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' படத்தை இயக்கிய முருகதாஸ் அதன் தோல்வி குறித்தும் சில பல காரணங்களைத் தெரிவித்துள்ளார். அதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவரது இயக்கத்தில் அடுத்து வர உள்ள 'மதராஸி' படம் ஏஆர் முருகதாஸுக்கு ஒரு பரீட்சையாகவே அமையும். அந்தப் படத்தின் ரிசல்ட் அவருக்கு முக்கியமானது.