பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை | ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் |
பராசக்தி படத்தில் சிவாஜியின் தங்கையாக நடித்த கல்யாணியை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. சிவாஜிக்கு அடுத்து கல்யாணி கேரக்டர்தான் பேசப்பட்டது. அந்த கல்யாணியாக நடித்தவர் ஜூனியர் ஸ்ரீரஞ்சனி. இவரது அக்கா இவருக்கு முன்பிருந்தே நடித்ததால் அவர் சீனியர் ஸ்ரீரஞ்சனி என்றும், அக்காவின் பெயரிலேயே இவர் ஜூனியர் சிவரஞ்சனி என்றும் அழைக்கப்பட்டனர். இயற்பெயர் மகாலட்சுமி.
தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற 'வர விக்ரயம்', 'குணசுந்தரி கதா' படங்களில் மூலம் அங்கு பிரபலமாகி இருந்த ஸ்ரீரஞ்சனியை தமிழுக்கு அழைத்து வந்தனர் இயக்குனர்கள் கிருஷ்ணன் - பஞ்சு. பக்கம் பக்கமாக இருந்த வசனத்தை பார்த்து பயந்து எனக்க இந்த படம் வேண்டாம் என்று ஓடியவரை இழுத்து பிடித்து நிறுத்தி வசனம் பேச பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தனர்.
அடுத்து 'ரத்தகண்ணீர்' படத்தில் எம்.ஆர்.ராதாவின் மனைவியாக நடித்தார். 'பராசக்தி' படத்தில் சிவாஜிக்கு தங்கையாக நடித்தவர் 'இல்லற ஜோதி' படத்தில் சிவாஜியின் மனைவியாக நடித்தார். முதல் மூன்று படங்களுமே வெள்ளி விழா படங்களாக அமைந்தது. 'குமாரி' படத்தில் எம்ஜிஆர் ஜோடியாக நடித்தார். அந்த படமும் வெற்றி பெற்றது. சினிமாவில் ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்ததும் அம்மா கேரக்டர்களில் நடித்தார், ஜெயலலிதாவின் அம்மாவாக நிறைய படங்களில் நடித்தார்.
தன் அக்காவின் அகால மறைவுக்குப் பிறகு, அக்காவின் கணவர் நாகமணியையும், அவரது மூன்று குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு ஸ்ரீரஞ்சனிக்கு வந்தது. அந்த குடும்ப கடமைகளை நிறைவேற்றுவதற்காக நடிப்பதை நிறுத்திக் கொண்டார் ஸ்ரீரஞ்சனி.