'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த மோகனுக்கு அப்போது உறுதுணையாக இருந்தவர் திரைப்பட புகைப்பட கலைஞர் ஸ்டில்ஸ் ரவி. மோகனை விதவிதமாக படங்கள் எடுத்து அதனை தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் கொடுத்து வாய்ப்பு தேடியவர். ஸ்டில்ஸ் ரவி முயற்சியால் மோகனுக்கு நிறைய வாய்ப்புகளும் வந்தன.
அப்படிப்பட்ட நண்பனுக்கு உதவ மோகன் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்த படம் 'நான் உங்கள் ரசிகன்'. ஸ்டில்ஸ் ரவி தயாரிப்பாளர் ஆனார். மனோபாலா படத்தை இயக்கினார். மோகனுடன் ராதிகா, ராஜீவ், நளினி, செந்தாமரை உள்ளிட்ட பலர் நடித்தனர். கங்கை அமரன் இசை அமைத்தார்.
கிராமத்து இளைஞன் சுப்ரமணி. இவனுக்கு நடிகை ரஞ்சனி என்றால் கொள்ளை ஆசை. அவருடைய தீவிர ரசிகன். ஒருகட்டத்தில், ரஞ்சனியின் அறிமுகம் கிடைக்கிறது. அவரிடமே வேலைக்கு சேர்கிறான். நடிகையிடம் ரசிகனாக இருப்பவன், வேலைக்காரனாகவும் ஆகிறான். இன்னும் நெருங்கிப் பார்க்க, அவள் மீது காதல் கொள்கிறான்.
ஆனால் இதெல்லாம் ரஞ்சனிக்குப் பிடிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு சைக்கோ போல் மாறி, நேசித்த ரஞ்சனியையே கொல்கிறான். அதைத் தெரிந்து கொண்ட மேனேஜரையும் பத்திரிகை புகைப்படக் கலைஞரையும் கொல்கிறான். ரஞ்சனியின் தங்கைக்கு இது தெரிய வருகிறது. அவளையும் அவளின் குழந்தையையும் கொல்லத் துணிகிறான். இறுதியில் அவர்கள் கொல்லப்பட்டார்களா, காப்பாற்றப்பட்டார்களா என்பதான் படத்தின் கதை.
மோகன் சுப்பிரமணியாகவும் ராதிகா ரஞ்சனியாகவும் நடித்திருந்தார்கள். காதல் படங்கள் மூலம் புகழ்பெற்ற மோகன் நண்பனுக்காக நெகட்டிவ் ஹீரோ கேரக்டரில் நடித்தது குறிப்பிடத்தக்கது.