நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் 'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்'. உன்னை நான் சந்தித்தேன், உதயகீதம் ,உயிரே உனக்காக, நினைவே ஒரு சங்கீதம் போன்ற சில்வர் ஜூப்ளி படங்களை இயக்கிய வெற்றி கே.ரங்கராஜ் இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். கடைசியாக அவர் 1992ம் ஆண்டு 'எல்லைச்சாமி' என்ற படத்தை இயக்கி இருந்தார்.
படத்தில் நாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்க, நாயகியாக புஜிதா பொன்னாடா நடித்துள்ளார். இரண்டாவது நாயகனாக பரதன் நடித்துள்ளார். இரண்டாவது நாயகியாக நிமி இமானுவேல் நடித்துள்ளார். மற்றும் பார்கவ் , நம்பிராஜன், கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், சச்சு, நளினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் கே.ரங்கராஜ் கூறும்போது, "வாழ்க்கையில் பணம் மட்டும் பிரதானமல்ல என்பதை உணர்த்தும் வகையில் வித்தியாமாக இருவேறு கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெறும் கிளைமாக்ஸ் காட்சிக்காக உண்மையான கிளைடர் பயன்படுத்தி முக்கியமான காட்சிகளை படம்பிடித்துள்ளோம். அந்த காட்சிகள் திரையில் பார்க்க மிகவும் பிரம்மாண்டமாகவும், நகைச்சுவை கலந்த திரில்லராகவும் இருக்கும். அது மக்களிடையே பரபரப்பாக பேசப்படும்.
படப்பிடிப்பு சென்னை மற்றும் கொடைக்கானலில் நடைபெற்றுள்ளது. இறுதிகட்ட பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. விரைவில் இசைவெயீட்டு விழா நடத்தி படத்தை திரையரங்குகளில் வெளியிட இருக்கிறோம்" என்றார்.