டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' | நடிக்க வைப்பதை விட நடிப்பது கடினம் : பாலாஜி சக்திவேல் | பிளாஷ்பேக் : தமிழ் மக்களை டிஸ்கோ பைத்தியம் பிடிக்க வைத்த படம் | பிளாஷ்பேக் : நல்லதங்காள் போன்று பெண்களை கதற வைத்த 'பெண் மனம்' | நிஜ சிங்கத்துடன் நடித்த ஷ்ரிதா ராவ் | மோகன்லால், பஹத் பாசிலை பின்னுக்குத் தள்ளிய கல்யாணி பிரியதர்ஷன் |
விஜய் நடிக்கும் கோட் படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு, பெரும்பாலான படப்பிடிப்பை முடித்துவிட்ட நிலையில் தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பை நடத்துவதற்காக துபாய் சென்றுள்ளார். விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலை வெங்கட்பிரபுவும் பின்னணி பாடியிருக்கிறார். இந்த பாடல்தான் கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியாகும் என்கிறார்கள். மேலும் இளையராஜா இசையில் அஞ்சலி படத்தில், தான் சிறுவனாக இருக்கும்போதே பின்னணி பாடிய வெங்கட் பிரபு, அதன் பிறகு கோவா, மங்காத்தா, மாநாடு என யுவன் சங்கர் ராஜா இசையில் இதுவரை 10 பாடல்கள் வரை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.