நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை : அஜித் நெகிழ்ச்சி | ''எங்களுக்கு 'வாழ்க' சொன்னது போதும்! நீங்க எப்ப வாழப்போறீங்க...?'': துபாயில் அஜித் பேட்டி | என் குணம் இப்படி தான்... ஆசையை சொன்ன அதிதி ஷங்கர் | துருவ நட்சத்திரம் படத்திற்கு யாரும் உதவவில்லை: கவுதம் மேனன் வருத்தம் | வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய 'விடுதலை': சூரி நெகிழ்ச்சி | 'ஜெயம்' வேண்டாம்; ரவி போதும்: அறிக்கை வெளியிட்டு அறிவிப்பு | ராம் பொத்தினேனி படத்தில் மோகன்லால்? | மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் பாட்ஷா! | ஜனவரி 17ல் தமிழில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் 'டாக்கு மகாராஜ்' | முதல் நாள் வசூல்- வணங்கானை முந்திய விஷாலின் மதகஜராஜா! |
ஹிந்தியில் சைத்தான் படத்தை அடுத்து இரண்டு புதிய படங்களில் தற்போது நடித்து வருகிறார் ஜோதிகா. தமிழில் 2021ம் ஆண்டு ரா.சரவணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சசிகுமாருடன் இணைந்து ஜோதிகா நடித்திருந்த ‛உடன்பிறப்பே' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
அண்ணன்- தங்கை செண்டிமென்ட் கதையில் உருவான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இரண்டாம் பாகத்திற்கான கதை பணியில் ஈடுபட்டிருந்தார் சரவணன். இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஜோதிகாவை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். ஹிந்தியிலும் ஜோதிகாவின் மார்க்கெட் சூடு பிடித்துள்ளதால், இப்படத்தை பான் இந்தியா படமாக எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.