கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் | மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் | கமல், அஜித் பட அப்டேட்: தீபாவளி பரிசாக வருமா? | மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் | படப்பிடிப்புக்கு 5 நாட்களுக்கு முன்புதான் பைசன் படத்தின் ஸ்கிரிப்டை படித்தேன்! - துருவ் விக்ரம் | ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் இணைந்த பார்த்திபன் | பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு : நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவு | 'கோச்சடையான்' பட விவகாரம் : ரஜினி மனைவி லதாவுக்கு சிக்கல் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ்! |
இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது விஜய்யை வைத்து கோட் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், மோகன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருவதால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் இருக்கிறது. அதற்கு ஏற்றபடி சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ஒரு பாடல் டீசரையும் வெளியிட்டிருந்தார்கள்.
சமீபத்தில் வெங்கட் பிரபு தனது சோசியல் மீடியா பதிவு ஒன்றில் எல்லா மாஸ் கமர்சியல் படங்களின் டிரைலர்களுமே ஒரே மாதிரியான டிரைலர்கள் தான்.. ஹீரோக்கள் அனைவருமே ஒரே மாதிரியான மாஸ் கலந்த வார்த்தைகளில் பேசும் ஒரே விதமான பஞ்ச் வசனங்கள் கொண்ட டிரைலர்கள் தான் என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் இவரது பதிவு சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் - ரஜினி கூட்டணியில் உருவாகும் கூலி படத்திற்காக சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசர் குறித்து தான் என்று நினைத்த ரசிகர்கள் பலரும் வெங்கட் பிரபுவுக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.
உடனடியாக இதுகுறித்து பதில் அளித்த வெங்கட் பிரபு, “இல்லை இல்லை.. அப்படியெல்லாம் இல்லை.. நாங்கள் எல்லோருமே கமர்சியல் படங்களை செய்து கொண்டிருக்கிறோம். அதனால் அப்படி சொன்னதிலும் கொஞ்சம் உண்மை இருக்கிறது. அதே சமயம் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தால் நாங்களும் வழக்கமான கமர்சியல் வடிவத்தில் இருந்து மாறி கொஞ்சம் வித்தியாசமாக கொடுக்க முயற்சிக்கிறோம்” என்று விளக்கம் அளித்துள்ளார்.