கவுதம் மேனன் இயக்கத்தில் ரவி மோகன் | மறுபரிசீலனை செய்யும் விஜய் ஆண்டனி | யாத்திசை இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | கண்ணப்பா படத்தில் சிவன் ஆக அக்ஷய் குமார் | நான் குடித்துக்கொண்டே இருப்பேன் : மிஷ்கின் ஓப்பன் ஸ்டேட்மெண்ட் | டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகிறது 'பாட்ஷா': தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு | முதன் முறையாக தனி இசை கச்சேரி நடத்துகிறார் சித்ரா | பிளாஷ்பேக் : கே.பாக்யராஜை கொலைகாரனாக ஏற்காத ரசிகைகள் | பிளாஷ்பேக்: திரையில் காதலித்து நிஜத்தில் திருமணம் செய்த நட்சத்திர ஜோடி | தேவயானியின் முதல் இயக்கத்திற்கு கிடைத்த விருது |
பாலா இயக்கிய நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி என்ற வேடத்தில் நடித்து பிரபலமானவர் கருணாஸ். தொடர்ந்து காமெடியனாக நடித்த அவர் ஒருகட்டத்தில் ஹீரோவாகவும் வளர்ந்தார். ஆனால் சில படங்கள் வெற்றி பெற்ற நிலையில், பின்னர் அவர் நடித்த படங்கள் தோல்வியடைந்ததால் இப்போது ஹீரோவாக நடிப்பதில் இருந்து விலகி, மீண்டும் காமெடியனாகியிருக்கிறார். அதோடு, அழகு குட்டி செல்லம் என்ற படத்தில் குணசித்ர நடிகராக நடித்திருக்கிறார். இந்த படத்தில் சில எமோஷனல் காட்சிகளில் அவர் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறாராம். அதோடு, இந்த மாதிரியான குணசித்ர வேடங்களைதான் நான் அதிகமாக விரும்புகிறேன். ஆனால் என்னை காமெடி கண்ணோட்டத்திலேயேதான் பார்க்கிறார்கள் என்றும் அந்த வேடத்தில் நடித்து முடித்ததும் சொன்னாராம் கருணாஸ்.
மேலும், இதே படத்தில் மொத்தம் 5 சிறுவர் - சிறுமியர்கள் நடித்துள்ளனர். அதில் கருணாஸின் மகன் கென்னும் ஒருவர். இப்படத்தில் அவர் ஒரு பாடலும் பாடியிருக்கிறாராம். இதுபற்றி கென் கூறுகையில், இந்த படத்தில் 5 சிறுவர்களில் நானும் ஒரு வேடத்தில் நடித்திருக்கிறேன். எங்களை நடிக்க வைக்க டைரக்டர் சார்லஸ் ரொம்ப கஷ்டப்பட்டார். ஆனால் எந்த டென்சனையும் எங்களிடம் காட்டிக்கொள்ளாமல் வேலை வாங்கினார். அதோடு படத்தில் நடித்தவர்களும் எங்களிடம் அன்பாக பழகினர். அதனால் படப்பிடிப்புக்கு போனது ஒரு பிக்னிக் போனது போல்தான் இருந்தது. எமோஷனலான கதை என்றாலும், படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் காமெடி செய்து கொண்டேயிருந்தோம். அதேசமயம், எல்லோருடைய உழைப்பையும் போட்டிருக்கிறோம். அதனால் இந்த அழகு குட்டி செல்லம் படமும் சூப்பராக வந்துள்ளது என்றார் கென்.