அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் | குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? | மகனுக்காக திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்த பவன் கல்யாண் மனைவி | 6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் | குஞ்சாக்கோ போபன் - பாவனா எதிர்பாராத சந்திப்பு | ஹிந்தி படத்தில் கரீனா கபூருக்கு ஜோடியாக இணைந்த பிரித்விராஜ் | இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் | ஒரே நாளில் 3 படங்கள் ; மூன்றிலும் வீணடிக்கப்பட்ட வில்லன் நடிகர் | ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
சத்யா மூவிஸ் நிறுவனர் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்து, ரஜினி நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், 1995ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'பாட்ஷா'. நக்மா, ரகுவரன், சரண்ராஜ், ஆனந்த்ராஜ், ஜனகராஜ், விஜயகுமார், யுவராணி மற்றும் பலர் நடித்திருந்தனர், சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். 1995ல் வெளியான இப்படம் ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
தற்போது அட்மாஸ் சவுண்ட் 4கே தொழில்நுட்பத்தில் ரீமாஸ்டர் செய்யப்படுகிறது. ஆர்.எம்.வீரப்பனின் மகன் தங்கராஜ் வீரப்பன் சத்யா மூவீஸ் சார்பில் வெளியிடுகிறார். இத்திரைப்படத்தின் 30 ஆண்டுகளையும், சத்யா மூவீஸின் 60வது பொன் விழாவையும் கொண்டாடும் வகையில் இதனை வெளியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள தயாரிப்பு நிறுவனம் வெளியீட்டு தேதியை பின்னர் அறிவிப்பதாக கூறியுள்ளது. இந்த படத்தின் முதல் காட்சிக்கு ரஜினியை அழைக்கும் திட்டமும் இருப்பதாக தெரிகிறது.