நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

தென்னகத்தின் இசை குயில் என்றும், சின்னகுயில் சித்ரா என்றும் அழைக்கப்படுகிறவர் கே.எஸ்.சித்ரா. அனைத்து இந்திய மொழிகள், ஆங்கிலம், பிரஞ்ச் உள்ளிட்ட சர்வதேச மொழிகளில் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி உள்ளார், 6 முறை தேசிய விருதுகளையும், 43 மாநில அரசு விருதுகளையும் பெற்றுள்ளார்.
சித்ரா திரைப்படங்களில் பாடுவதோடு, சின்னத்திரை இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று இளம் கலைஞர்களையும் ஊக்குவித்து வருகிறார். இதுதவிர உலகின் எல்லா நாடுகளிலும் இசை கச்சேரிகளில் பாடியுள்ளார். இந்த நிலையில் அவர் தனிப்பட்ட முறையில் சோலோவாக இசை நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் நடத்துகிறார். 'கே.எஸ்.சித்ரா லைவ் இன் கான்செட்' என்ற பெயரில் இதனை நடத்துகிறார். வருகிற பிப்ரவரி 8ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.