23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் |
கே.பாக்யராஜின் படங்களுக்கு அவரது கடைசி படம் வரைக்கும் பெண்கள்தான் அதிக அளவில் ரசிகர்களாக இருந்தார்கள். அவரது படங்களை வெற்றிப் படமாக்கியதும் அவர்கள்தான். பாக்யராஜ் வேகமாக வளர்ந்து வந்த காலத்தில் தனது பாணியில் இருந்து மாறி அவர் இயக்கிய படம் 'விடியும் வரை காத்திரு'. 'கன்னிப் பருவத்திலே' படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும், இந்த படத்தில் அவர் கொலைகார வில்லனாக நடித்தார்.
ஒரு பணக்கார வீட்டுக்குள் பாசக்காரன்போன்று வேஷம் போட்டு சென்று அந்த சொத்துகளை பறிக்க அவர் செய்யும் தந்திரங்களும், கொலைகளும்தான் படம். இந்த படத்திற்கு முன்புதான் 'மவுன கீதங்கள்' வெளிவந்திருந்தது. அதில் நேர்மையான ஒரு ஆண் மகனாக நடித்து பெண்கள் மத்தியில் நல்ல இமேஜை பெற்றிருந்த நேரத்தில் இப்படி ஒரு கேரக்டரில் அவர் நடித்ததை அவர்கள் ஏற்கவில்லை. படத்தில் அவர் நடிப்பும் பாராட்டும்படி இல்லை.
இதனால் இந்த படம் வழக்கமான வெற்றியை பெறவில்லை. என்றாலும் திரைக்கதை, பின்னணி இசை, வசனம் இவற்றுக்காக படம் ஓரளவுக்கு ஓடியது. ஆண் ரசிகர்கள் படத்தை ரசித்தார்கள். சத்யகலா நாயகியாகவும், கராத்தே மணி போலீஸ் அதிகாரியாகவும் நடித்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார்.