கோவா திரைப்பட விழாவில் தமிழ் குறும்படம் | 110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை | முதல்வர் குடும்ப திருமணத்தில் தனுஷ், நயன்தாரா : முகத்தை திருப்பிக் கொண்டு வெறுப்பை காட்டினர் | இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் |
எண்பதுகளில் மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க இயக்குனராக வலம் வந்தவர் ஆலப்பி அஸ்ரப். மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய இவர், தமிழில் ஆனந்தபாபு, சுகன்யா நடித்த 'எம் ஜி ஆர் நகரில்', பாண்டியராஜன் நடித்த 'நீலக்குயில்' உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, 80களில் புகழ்பெற்ற நடிகையாக இருந்த ஒருவர் நியூயார்க்கிற்கு படத்தில் நடிப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டு அங்கு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்றை கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். அவர் கூறியதன் சாராம்சம் வருமாறு:
எண்பதுகளில் பிரேம் நசீர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமாக இருந்தவர் அந்த நடிகை. ஒரு நாள் அவருக்கு நியூயார்க்கில் இருந்து பேசுவதாக கூறிய ஒரு நபர் தங்களது படத்தில் அவர் நடிக்க வேண்டும் என்று கூறி இங்கே ஆள் அனுப்பி அதற்கான ஒப்பந்தங்களிலும் கையெழுத்து பெற்றுள்ளார். அதன் பிறகு நியூயார்க் சென்று இறங்கிய நடிகையை வரவேற்று தனியாக ஒரு பிளாட்டில் தங்க வைத்துள்ளனர். அன்றிலிருந்து சம்பந்தம் இல்லாத சில நபர்கள் அந்த பிளாட்டிற்கு வரத் தொடங்கியவுடன் அந்த நடிகையை தொடர்ந்து சில நாட்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனராம்.
அவர் அங்கிருந்து தப்பித்து விடாதபடி எப்போதும் இரண்டு பேர் காவலுக்கு வைக்கப்பட்டிருந்தார்களாம். அந்த சமயத்தில் அவருக்கு நியூயார்க்கில் பணிபுரிந்து கொண்டே கேரளாவில் இருந்து கலைஞர்களை அழைத்து வந்து கலை நிகழ்ச்சி நடத்தும் தாரா ஆர்ட்ஸ் விஜயன் என்பவர் நினைவுக்கு வந்துள்ளார். உடனடியாக அங்கிருந்த தொலைபேசி மூலமாக விஜயனை அந்த நடிகை தொடர்பு கொண்டு உள்ளார். அந்த நாட்களில் தாரா ஆர்ட்ஸ் விஜயன், அங்கே உள்ள டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் நடிகை எந்த இடத்தில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதை ஓரளவிற்கு தாரா ஆர்ட்ஸ் விஜயன் அடையாளம் கண்டு கொண்டார்.
ஆனாலும் அந்தப் பகுதியில் சரியாக எந்த பிளாட்டில் அடைக்கப்பட்டுள்ளார் என அவரால் கணிக்க முடியவில்லை. பின்னர் தாராவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் அடைக்கப்பட்டு இருக்கும் அறையில் இருந்து பார்க்கும்போது எதிரில் என்னென்ன அடையாளங்கள் இருக்கின்றன என்பது போன்ற விவரங்களை கேட்டறிந்து இறுதியாக அந்த பிளாட்டிற்கு சென்று நடிகையை மீட்டு வந்துள்ளார். மீண்டும் அவரை ஹோட்டல் எதிலும் தங்க வைத்தால் பிரச்னை வரலாம் என்பதால் நேரடியாக விமான நிலையத்திற்கே அவரை அழைத்து வந்து டிக்கெட் எடுத்து கேரளாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதன்பிறகு இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்து மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட பிரியா படத்தில் சிங்கப்பூரில் இதேபோல வில்லன்களால் அடைத்துவைக்கப்பட்ட நடிகை ஸ்ரீதேவியை ரஜினிகாந்த் காப்பாற்றுவது போல தான் இந்த நடிகை காப்பாற்றப்பட்ட நிகழ்வும் அமைந்துவிட்டது. இந்த சமயத்தில் இப்படி ஒரு சம்பவத்தை கூறுவதற்கு காரணம் இப்போது உள்ள தலைமுறையை சேர்ந்த இளம்பெண்கள் இது போன்ற விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் என்று கூறியுள்ளார் இயக்குனர் ஆலப்பி அஸ்ரப்.