'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ், தெலுங்கு சினிமாவில் 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக இருப்பவர் த்ரிஷா. தற்போது அஜித்துடன் 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி', கமல்ஹாசனுடன் 'தக் லைப்', தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'விஷ்வம்பரா', மலையாளத்தில் மோகன்லாலுடன் 'ராம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை நேற்று அதன் 'குறுக்கெழுத்து போட்டி'யில் த்ரிஷாவைப் பற்றிய ஒரு கேள்வியைக் கேட்டுள்ளது. 'கிருஷ்ணன் நடிகை, தென்னிந்திய சினிமா,' என அதற்கான க்ளூவைக் கொடுத்துள்ளது. 52வது வார்த்தைக்கான விடையாக அந்தக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
தமிழ் நடிகை ஒருவரது பெயர் அமெரிக்காவின் பிரபல பத்திரிகையில் இடம் பெற்றிருப்பது ஆச்சரியமானது. நடிகை சமந்தா அந்த குறுக்கெழுத்து பக்கத்தைப் பகிர்ந்து த்ரிஷாவை 'குயின்' எனக் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் த்ரிஷா.