தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? |
மலையாளத் திரையுலகத்தின் சீனியர் நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், அப்பாவைப் போலவே மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு தாண்டி ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.
2012ல் வெளிவந்த 'செகண்ட் ஷோ' என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் கதாநாயகனாக அறிமுகமான துல்கர், 2014ல் வெளிவந்த 'வாயை மூடிப் பேசவும்' படத்தின் முலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 2018ல் தெலுங்கில் வெளிவந்த 'மகாநடி' படத்தின் மூலம் அம்மொழியிலும் நுழைந்தார்.
மறைந்த நடிகை சாவித்ரியின் பயோபிக் படமாக வந்த அப்படத்தில் சாவித்ரியின் காதலர், கணவர், நடிகர் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் துல்கர். அந்தப் படம் தெலுங்கில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதற்கடுத்து 2022ல் வெளிந்த 'சீதாராமம்' தெலுங்குப் படத்தில் நடித்தார் துல்கர். அந்தப் படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்போது கடந்த வாரம் தீபாவளிக்கு வந்த 'லக்கி பாஸ்கர்' தெலுங்குப் படம் அவரது மூன்றாவது தெலுங்குப் படமாக அமைந்துள்ளது. அந்தப் படத்திற்கும் நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது. நான்கு நாட்களில் 50 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கில் துல்கர் நடித்த மூன்று படங்களுமே வியாபார ரீதியாக வெற்றி பெற்று அவருக்கு ஹாட்ரிக் வெற்றியைத் தந்துள்ளது.