அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் | குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? | மகனுக்காக திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்த பவன் கல்யாண் மனைவி | 6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் | குஞ்சாக்கோ போபன் - பாவனா எதிர்பாராத சந்திப்பு | ஹிந்தி படத்தில் கரீனா கபூருக்கு ஜோடியாக இணைந்த பிரித்விராஜ் | இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் | ஒரே நாளில் 3 படங்கள் ; மூன்றிலும் வீணடிக்கப்பட்ட வில்லன் நடிகர் | ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து முன்னனி நடிகையாக வலம் வருபவர். சமீபத்தில் அவரது நீண்ட வருட காதலர் ஆண்டனியை மணந்தார். இதன்பிறகு படங்களில் நடிப்பாரா என்பது குறித்து தெரியவில்லை.
தற்போது முதன்மை கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்து வந்தாலும் அவர் முதல்முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படம் தெலுங்கில் நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாற்றை மையமாக உருவான மகாநடி படம் தான். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் முதலில் மகாநடி படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.
அது ஏன் என அவர் கூறியதாவது, ‛‛மகாநடி படத்தின் கதையை நாக் அஸ்வின் என்னிடம் கூறியபோது சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிக்க பயந்து மறுத்துவிட்டேன். அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் நான் ஏன் நடிக்க மறுத்தேன் என கேட்டபோது, அந்த கதாபாத்திரத்தை என்னால் சரியாக திரையில் கொண்டுவர முடியுமா? இல்லையா? என்ற பயம் மற்றும் தயகத்தினால் அதை நிராகரித்தேன் என கூறினேன். பின்னர் அனைவரும் தந்த ஊக்கத்தினால் நடித்தேன்'' என்றார்.