ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனையும் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்ட ஒரே அரசியுமான வேலு நாச்சியாரின் வரலாறு 'வீரமங்கை வேலுநாச்சியார்' என்ற பெயரில் படமாக தயாராகி வருகிறது. டிரண்ட்ஸ் சினிமாஸ் சார்பில் ஜெ .எம்.பஷீர் தயாரிக்கும் இத்திரைப்படத்தை 'ஊமைவிழிகள்' படத்தின் இயக்குனர் ஆர். அரவிந்தராஜ் இயக்குகிறார். வேலுநாச்சியாராக ஆயிஷா என்ற புதுமுகம் நடிக்கிறார்.
படத்தின் மோஷன் பிக்சர் டீசர் வேலுநாச்சியாரின் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு லண்டனில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி வேலு நாச்சியாரின் பிறந்த நாள் அன்று வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து தயாரிப்பாளர் ஜெ.எம்.பஷீர் கூறும்போது, "வேலு நாச்சியார் வாழ்க்கை வரலாற்றை திரையில் கொண்டு வருவதில் மிகவும் பெருமை அடைகிறோம். இதில் முதன்மை வேடத்தில் எனது மகள் ஆயிஷா நடிப்பது பெரும் மகிழ்ச்சி. வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்து இப்படத்தின் ஸ்கிரிப்ட் உருவாக்கப்பட்டுள்ளது வேலுநாச்சியாரின் பிறந்தநாள் அன்று இந்த டீசரை வெளியிட்டு இருப்பது இரட்டிப்பு சந்தோஷம்," என்றார்.