ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் மற்றும் வைட் ஆங்கிள் மீடியா பிரைவேட் லிமிடெட், அனீஷ் அர்ஜுன் தேவின் வாமிண்டியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'அகத்தியா'. பாடலாசிரியார் பா.விஜய் எழுதி, இயக்கி உள்ளார். இதில் ஜீவா, அர்ஜூன், ராஷி கண்ணா உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
1940களில் வாழ்ந்த இந்திய விஞ்ஞானி ஒருவர் ஒரு உயர்ந்த கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார். இந்த கண்டுபிடிப்பு வெளியில் வந்தால் இந்தியர்களின் மதிப்பு உயர்ந்து விடும் என்று கருதும் ஆங்கிலேய அரசு அந்த விஞ்ஞானியை குடும்பத்தோடு அழித்து விடுகிறது. ஆனாலும் அந்த விஞ்ஞானி அந்த கண்டுபிடிப்பு ரகசியத்தை ஒரு இடத்தில் மறைத்து வைத்துள்ளார். அதனை 2024ல் வாழும் ஒரு பத்திரிகையாளர் எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதுதான் கதை.
பேண்டஸி ஹாரர் திரில்லர் வகை கதை. இதில் விஞ்ஞானியாக அர்ஜூனும், இளைஞனாக ஜீவாவும் நடித்திருக்கிறார்கள். வரும் ஜனவரி 31ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.
படம் குறித்து ஜீவா கூறும்போது "ஒரு பேண்டஸி ஹாரர் த்ரில்லரில் பணிபுரிவது முற்றிலும் புதிய அனுபவம். கதை, காட்சிகள், என நிஜ வாழ்வைத் தாண்டி விரியும் பிரம்மாண்ட உலகம் என்பது மிக மிகப் புதிதானது. பிரமிக்க வைக்கும் இந்த உலகத்தை உருவாக்கியதற்காகக் கலை இயக்குநரையும், ஒளிப்பதிவாளரையும் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். பா.விஜய் கதையைச் சொன்னபோது, இந்த தலைசிறந்த படைப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென விரும்பி உடனே ஒப்புக்கொண்டேன். இப்படம் கண்டிப்பாக மிகப் புதிதான உலகிற்குள் அழைத்துச் செல்லும்.” என்றார்.




