‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க உள்ள 'திரிஷயம் 3' படத்தின் பூஜை இன்று ஆரம்பமானது. மீனா, ஆஷா சரத், அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில் மற்றும் பலர் நடித்த இதன் முதல் பாகம் 2013ல் வெளியாகி வரவேற்பைப் பெற்று 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இரண்டாம் பாகம் 2021ல் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. அப்போது கொரானோ இரண்டாம் அலை இருந்ததால் தியேட்டர்களில் வெளியிடாமல் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட்டார்கள்.
முதல் பாகம் படம் தமிழில் கமல்ஹாசன் நடிக்க 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக்காகி 2015ல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப் தமிழிலும் இப்படத்தை இயக்கினார். ஆனால், இரண்டாம் பாகம் தமிழில் ரீமேக்காகவில்லை.
முதல் பாகம் கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடிக்க, தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்க, ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிக்க, சிங்களத்தில் ஜாக்சன் ஆண்டனி நடிக்க, மாண்டரின் சீன மொழியில் சியோ யங் நடிக்க ரீமேக் ஆனது.
இரண்டாம் பாகம் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டும் ரீமேக் ஆனது.