தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் | ஆந்தாலஜி கதையில் உருவாகும் 'வவ்வல்ஸ்' |

கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் வெளியாகி பான் இந்தியா அளவில் வரவேற்பை பெற்ற படம் ‛காந்தாரா'. குறைந்த பட்ஜெட்டில் உருவாகி 400 கோடி வசூலை குவித்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் காந்தாரா படத்தின் முந்தைய கதையில் ‛காந்தாரா சாப்டர் 1' என்ற பெயரில் உருவாகி உள்ளது. முக்கிய வேடத்தில் ருக்மணி வசந்த் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இதன் டிரைலரை பான் இந்திய அளவில் வெளியிட்டுள்ளனர். தமிழ் டிரைலரை சிவகார்த்திகேயன், தெலுங்கு டிரைலரை பிரபாஸ், ஹிந்தி டிரைலரை ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் வெளியிட்டனர். டிரைலர் பார்க்கவே பிரமாண்டமாய், மிரட்டலாய் உள்ளது. காந்தாரா படத்தின் முந்தைய பாக கதை என்பதால் சரித்திர பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது.
வன நிலத்தில் உள்ள பூர்வ குடி மக்களுக்கும், மன்னனுக்குமான மோதல் தான் கதை என டிரைலரை பார்க்கையில் புரிகிறது. குறிப்பாக குலிகா தெய்வத்தின் பின்னணி, அதுதொடர்பான காட்சிகள், சரித்திர பின்னணியில் நகரும் காட்சி அமைப்புகள், போர்கள் என டிரைலரை பார்க்கும்போதே படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. அக்., 2ல் படம் உலகம் முழுக்க வெளியாகிறது.




