நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
மறைந்த திமுகவின் முன்னாள் தலைவரும், முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கருணாநிதியின் வரலாற்று புகைப்பட கண்காட்சி சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டது.
பாடலாசிரியர் பா.விஜய் இயக்கும் படத்தில் நடித்து வரும் நடிகர் ஜீவா அவருடன் சென்று இந்த கண்காட்சியை பார்வையிட்டார். அதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: கருணாநிதி பற்றி நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் இங்கு வந்து பார்க்கும் போது, சினிமாவைத் தாண்டி முதல்வராக அவர் செய்ததைப் பார்க்க முடிந்தது. கிட்டதட்ட 40 வருஷம் மக்களுக்காக பணி செய்திருக்கார். அதை ரொம்ப அழகாக இங்கு வைத்துள்ளனர். வெளிநாட்டில் மியூசியம் இருப்பது போல் இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது. குறிப்பாக ஹாலோகிராமில் கலைஞர் பேசியது சிறப்பாக இருந்தது என்றார்.
கருணாநிதியின் வாழ்க்கை சினிமாவாக எடுக்கப்பட்டால் அதில் நடிப்பீர்களா? என்ற கேட்டபோது “கண்டிப்பாக நடிப்பேன். அதுவும் கருணாநிதியாககூட நடிப்பேன். காரணம் தெலுங்கில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை படத்தில் நடித்த அனுபவம் இருக்கிறது. கருணாநிதியின் வாழ்க்கையை சினிமாவாக எடுப்பதைவிட வெப் தொடராக எடுப்பதே சிறந்தது. காரணம் அவரது வாழ்ககையை இரண்டரை மணி நேர சினிமாவுக்குள் சொல்லிவிட முடியாது” என்றார்.