லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
நடிகர் விஷால் ஒரு பக்கம் நடிகர் சங்க பொறுப்புகள், இன்னொரு பக்கம் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களின் படப்பிடிப்பு என பிசியாக இருந்து வருகிறார். அவரைப் போன்று பேச்சிலராக இருந்த அவரது நண்பர்கள் அனைவரும் திருமணமாகி செட்டில் ஆகிவிட்ட நிலையில் நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடித்து அதில் இடம்பெற உள்ள திருமண மண்டபத்தில் தான் தனது திருமணம் நடைபெறும் என்று உறுதியாக கூறி வருகிறார் விஷால்.
இடையில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகி துரதிர்ஷ்டவசமாக அதுவும் பாதியில் நின்று போனது. ஒரு சில நடிகைகளுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தான் யாரையும் காதலிக்கவில்லை என்று கூறிவிட்டார் விஷால். இந்த நிலையில் இளம்பெண் ஒருவருடன் முகத்தை மூடியபடி விஷால் ஓடும் வீடியோ ஒன்று தற்போது வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
அந்த வீடியோவில், நியூயார்க்கில் ஒரு இளம்பெண்ணுடன் விஷால் ஜாலியாக நடந்து செல்கிறார். அப்போது அங்கே அவரை கண்டுபிடித்து விட்ட ஒரு ரசிகர் தூரத்தில் இருந்து அவரை பெயர் சொல்லி அழைக்க விஷால் அதிர்ச்சியாகி உடனடியாக தான் அணிந்திருந்த கோட் மூலமாக தனது முகத்தை மறைத்துக் கொண்டு அந்த பெண்ணையும் வேகமாக இழுத்தபடி ஓடி உள்ளார்.
இந்த அளவிற்கு அவர் முகத்தை மறைத்தபடி ஒரு பெண்ணுடன் ஓடுவதால் ஒருவேளை அவர் விஷாலின் காதலியா அல்லது யார் அந்த பெண் என பலரும் சோசியல் மீடியாவில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.