ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' |
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் ஒரு பக்கம் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அடுத்ததாக ஜெய்பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் கதாநாயகனாக ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
சமீபத்தில் தூத்துக்குடி பகுதி பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நகரமே துண்டிக்கப்பட்டது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் மீண்டும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் துவங்கியுள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தில் ரஜினிகாந்த் வந்து இறங்கிய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.