என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. வெளியான தினத்தில் இருந்தே பாசிடிவான விமர்சனங்களை பெற்று ஒரு வெற்றிப் படமாக மாறியுள்ளது. இந்த படத்தில் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் ரஜினிக்கு அடுத்தபடியாக அனைவரையும் கவர்ந்தவர் என்றால் அது பஹத் பாசில் தான். படம் பார்த்து விட்டு வரும் அனைவருமே தவறாமல் பஹத்தின் நடிப்பு பற்றி குறிப்பிட்டு பாராட்டி வருகிறார்கள். ரஜினிக்கும் அவருக்குமான காட்சிகள் அனைத்துமே நகைச்சுவையாகவும் போரடிக்காத விதமாகவும் உருவாக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இந்த படத்தில் நீளம் காரணமாக தூக்கப்பட்ட, தியேட்டரில் இடம் பெறாத பஹத் பாசில் நடித்த காட்சி ஒன்றை தயாரிப்பு நிறுவனம் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளது. அதில் போலீஸ் அதிகாரியான ரித்திகா சிங்கிடம் சாப்பாடு ஆர்டர் பண்ணுங்க மேடம் என பஹத் சொல்ல, இந்த சூழலில் உனக்கு மட்டும் எப்படி பசிக்குது என பதிலுக்கு கோபமாக கேட்கிறார் ரித்திகா சிங். அதற்கு, “மேடம் இந்த பசி, பட்டினி, தூக்கம், இருமல், விக்கல், பணம் இதெல்லாம் எப்ப வரும்னு தெரியாது எப்ப போகும்னும் தெரியாது.. எச்சச்ச எச்சச்ச கெச்சச்ச கெச்சச்ச” என்று முத்து படத்தில் ரஜினி பேசி ஹிட்டான வசனத்தை ரித்திகாவிற்கு பதிலாக கொடுக்கிறார் பஹத் பாசில்.
இந்த காட்சியை இப்போது பார்த்து ரசித்து வரும் ரசிகர்கள் பலரும், இதை படத்தில் வைத்திருந்தால் தியேட்டரில் விசில் பறந்திருக்குமே இதை ஏனய்யா நீக்கினீர்கள் என்று கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.