ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் மீடியாக்களில் பரபரப்பாக வலம் வர ஆரம்பித்துள்ளார் நடிகர் ராணா டகுபதி. இன்னொரு பக்கம் ஹிந்தியில் ஆலியா பட் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான ஜிக்ரா திரைப்படத்தை தெலுங்கில் வெளியிடும் உரிமையை ராணா தான் பெற்றிருந்தார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்வுகளை தடபுடலாகவும் நடத்தினார் ராணா. அந்த வகையில் சமீபத்தில் நடிகை சமந்தா இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இது அவர் ராணாவின் மீது கொண்ட அன்பு காரணமாகத்தான்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த சமந்தாவை ராணா அன்பாக அரவணைத்து அழைத்துச் செல்லும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வைரல் ஆகி வருகிறது. இது குறித்து ரசிகர்கள் தங்களது அன்பான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக ராணாவின் திருமணத்தின் போது நடிகை சமந்தா ஒரு சகோதரியாக நின்று அந்த திருமணத்தில் செய்ய வேண்டிய வேலைகளை கவனித்தார் என்றும், தொடர்ந்து ராணா வெளியிடும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொண்டு தனது பங்களிப்பை தந்து வருகிறார் என்றும் இது போன்று ஒரு சகோதரியைப் பெற ராணா நிச்சயம் தகுதியானவர் என்றும் இவர்களது சகோதரத்துவத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.