ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
முற்றிலும் புதியவர்கள் நடித்த பாதி உனக்கு பாதி எனக்கு என்ற படத்தின் ஆடியோ விழாவில், மறைந்த முன்னணி சினிமாவின் சாதனை கலைஞர்களின் புகைப்படங்களை வைத்து, அவர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம் என்று ஒரு பேனரை வைத்திருந்தனர். ஆனால், அதில் தற்போது உயிரோடு இருக்கும் டைரக்டர்கள் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், திரிலோகசந்தர் என்ற இயக்குனர்களின் படங்களும் இடம்பெற்றிருந்தது.
அதனால், அதைப்பார்த்து விழாவுக்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதுபற்றி சிலர் சொன்னபோது, அப்படக்குழுவினரும் அதிர்ந்தனர். குறிப்பாக, புதுமுக டைரக்டர் மீது விழாவுக்கு வந்திருந்தவர்களின் கவனம் திரும்பியது. உயிரோடு இருக்கும் சாதனை டைரக்டர்களையும் இப்படி கொன்றுவிட்டாரே என்பதுபோல் அவரை பார்த்தனர்.
ஆனால், அதையடுத்து விழாவுக்கு வந்திருந்த சினேகன் உள்ளிட்டவர்கள் தங்கள் பேச்சில் அதை சரி செய்ய முயற்சித்தனர். குறிப்பாக, கலைஞர்கள் இறந்த பிறகும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் அவர்களை இறந்து விட்டார்கள் என்று சொல்ல முடியாது. அந்தவகையில், இந்த பட்டியலில் இருக்கும் இறந்தவர்கள்கூட இன்னும தங்களது படைப்புகளால் இந்த உலகில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று பேசி ஒருவழியாக சமாளித்தனர்.