ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
யுடியூப் சேனல்களில் நடிகர் நடிகைகள் குறித்து நடிகர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட சிலர் ஆதாரம் இல்லாத அவதூறு செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் ஒரு எச்சரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில், ‛‛தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் நலனை பேணுவது, பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதும் எங்கள் தலையாய கடமை. எங்கள் உறுப்பினர்களான நடிகர்கள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும், அடிப்படை ஆதாரம் ஏதும் இன்றி பல தவறான பொய்யான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த சேகுவாரா என்ற புனைப்பெயர் கொண்ட ஜெய்சங்கர் என்பவர் மீது தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக சட்ட ரீதியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். அந்த வழக்கின் கடுமையை உணர்ந்து இனி எந்தவித அவதூறான செய்திகளையும் பதிவிட மாட்டேன் என்று குற்றம் சாட்டப்பட்டவர் உறுதிமொழி தந்து நீதிமன்றத்தில் ஒரு மனு சமர்ப்பித்தார். அதனை ஏற்ற நீதிமன்றம் அந்த உறுதி மொழியில் இருந்து அவர் தவறக் கூடாது என்ற கடுமையான உத்தரவின் அடிப்படையில் அந்த நபருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.
இதனைத்தொடர்ந்து சில காலம் அவதூறுகள் ஏதும் வெளிவராத நிலையில் சமீபகாலமாக மீண்டும் பயில்வான் ரங்கநாதன் என்னும் நபர் உட்பட பலரும் எங்கள் சங்கத்தின் பல உறுப்பினர்கள் மீது ஆதாரமற்ற அவதூறுகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். இப்படி அவதூறு பரப்புபவர்கள் மேற்காணும் வழக்கை மனிதில் கொண்டு உடனடியாக அவர்களது சட்டவிரோத செயலை நிறுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அவதூறு பரப்பும் அனைவர் மீதும் கடந்த நபரை விட கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தென்னிந்திய நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுக்கிறது. இனி ஒரு முறை எங்கள் உறுப்பினர்கள் தொடர்பான ஆபாசமான அவதூறான கருத்துக்களை பதிவேற்றம் செய்பவர்கள் தாமதமின்றி சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கம் அந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.