'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பில் சென்னை நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை கருத்தரங்கை துவக்கி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதில் பேசும்போது "திரைப்படங்களில் குட்கா உள்ளிட்ட போதை பொருள்களின் தீங்கு பற்றிய விழிப்புணர்வு திரைப்படங்களில் இடம்பெற வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் திரைப்படங்களில் போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நடிகர்களை கொண்டு போதை பொருள் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடுவது என்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் நாசர் விடுத்துள்ள அறிக்கையில் "முதல்வரின் கோரிக்கையை ஏற்பது எங்கள் கடமை. முதல்வரின் வேண்டுகோளை ஏற்று வருங்காலங்களில் குட்காவுக்கு எதிரான விழிப்புணர்வை அதிகரிக்கவும், முன்னணி நடிகர்களை வைத்து குட்கா போன்ற போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.