பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது சில தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். அதில் இன்னும் முடிக்கப்படாமல் இருக்கும் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை கட்டி முடிக்க வாங்க வேண்டிய கடன் தொகையை 40 கோடி ரூபாயாக அதிகரித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு முன்பு விஜயகாந்த் தலைவராக இருந்த போது நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க கலைநிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அதில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கட்டணங்கள் மூலம் கடனை அடைத்தார்கள். இப்போது கட்டிடம் கட்ட, மீண்டும் கலைநிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் நேற்று தெரிவித்திருந்தார்.
நேற்றைய நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நகைச்சுவை நடிகர் செந்தில், “ஹீரோக்களிடம் போய் கேளுங்க… கோடி கோடியாக சம்பாதிக்கிறாங்களே,” எனப் பேசினார்.
கலைநிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களிடம் இருந்து பணத்தைத் திரட்டுவது குறித்தும், முன்னணி நடிகர்கள் நன்கொடை தர வேண்டும் என்பது குறித்தும் சமூக வலைத்தளங்களில் பல ரசிகர்கள் விமர்சித்து கருத்துக்களைப் பதிவிட்டனர்.
நேற்றைய பொதுக்குழு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிலம்பரசன், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களும், நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் கலந்து கொள்ளவே இல்லை. சில பல கோடிகளில் சம்பளம் வாங்கும் இது போன்ற முன்னணி நடிகர்கள் ஆளுக்கு சில லட்சங்களைத் தந்தாலே போதும் எந்த ஒரு கடனையும் வாங்காமல் நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் கட்டுவதற்கான அந்த 40 கோடி ரூபாயைத் திரட்டிவிடலாம் என்று பல ரசிகர்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கு முன்பும் இப்படி வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடந்தபோது அங்கும் பொதுமக்களிடம் இப்படி கையேந்தி நிற்க வேண்டுமா என்ற விமர்சனம் வந்தது.
எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டிடத்தைக் கட்ட முன்னணி ஹீரோக்கள் என்ன செய்யப் போகிறார்கள் என ரசிகர்கள் கேள்வி கேட்கிறார்கள்.