'18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் | 8 ஆண்டுகளுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் கயல் சந்திரன் | இணைந்து நடிக்கும் தாயும், மகளும் | பிளாஷ்பேக் : வில்லுப்பாட்டு கச்சேரி நடத்தி குடும்பத்தை காப்பாற்றிய நடிகர் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரை ஏமாற்றிய 'குமாரி' | ரஜினியை சந்தித்த சிம்ரன் |
விநாயகர் சதுர்த்தி பண்டிகை அடுத்தவாரம் ஆகஸ்ட் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விடுமுறை நாள் என்பதால் அன்றைய தினத்திலும் புதிய படங்கள் வெளியாவது வழக்கம். இந்த வருட விநாயகர் சதுர்த்தி தினத்தன்று கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா', ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள 'அடங்காதே' ஆகிய படங்கள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இரண்டு படங்களின் வெளியீடு பற்றி எந்த ஒரு சத்தமும் இல்லை. எந்த விதமான போஸ்டர்கள், சமூக வலைத்தள பதிவுகள், பத்திரிகையாளர் சந்திப்புகள் என எதுவுமே நடக்கவில்லை. அதனால், அந்த இரண்டு படங்களும் அன்றைய தினம் வெளியாகுமா என்பது சந்தேகம்தான்.
அது போல ஆகஸ்ட் 29ம் தேதி அதர்வா நடித்துள்ள 'தணல்' படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்தப் படம் பற்றிய அப்டேட் எதுவும் பின்னர் வெளியாகவில்லை. அதனால், அந்தப் படமும் வெளியாகுமா என்பது தெரியவில்லை.
எந்தெந்த படங்கள் வரும் வாரம் வெளியாகும் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிய வரும்.