துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா |

சின்னத்திரையில் இருந்து சினிமா வந்த புகழ் கதைநாயகனாக நடித்த படம் 'மிஸ்டர் ஜூ கீப்பர்'. 'இனியவளே, ஜூனியர் சீனியர்' படங்களை இயக்கிய சுரேஷ் இயக்கி இருந்தார். கடந்த 2 ஆண்டுகளாக இந்த படம் தயாராகி வருகிறது. சிலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பல காரணங்களால் படம் ரிலீஸ் ஆகவில்லை.
இந்நிலையில், ஆகஸ்ட் 1ம் தேதி ரிலீஸ் என்று மீண்டும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த முறையானது சொன்னபடி படம் ரிலீஸ் ஆகிவிட வேண்டும். எந்த தடையும் வரக்கூடாது என்று புகழ் கடவுளை வேண்டிக்கொண்டு இருக்கிறாராம். ஒரு புலிக்குட்டியை பூனைக்குட்டி என நினைத்து வளர்கிறார் அப்பாவியான புகழ், என்ன நடக்கிறது என்பது கதை.
இதேபோல் பல ஆண்டுகளாக முடங்கி கிடந்த ஜி.வி.பிரகாஷின் 'அடங்காதே' படம், ஆகஸ்ட் 27ல் ரிலீஸ் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. சண்முகம் முத்துசாமி இயக்கிய இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷூடன், சரத்குமார், மந்திராபேடி நடித்தனர். பல்வேறு சென்சார் பிரச்னை, நிதி சிக்கல்களால் இந்த படம் 8 ஆண்டுகள் வெளியாகாமல் தவித்தது. இந்தமுறையாவது ரிலீஸ் ஆக வேண்டும் என்று படக்குழுவினர் நினைக்கிறார்கள். இதற்கிடையில், ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாக வேண்டிய ஜி.வி.பிரகாஷின் 'பிளாக்மெயில்' படமும் சட்டச் சிக்கல், நிதிப் பிரச்னையால் சொன்ன தேதியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.