நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

அறை எண் 305-ல் கடவுள் திரைப்படத்தில் ஜாவா சுந்தரேசனாகப் பலராலும் அறியப்பட்ட நகைச்சுவை நடிகர் 'ஜாவா சுந்தரேசனின்' இயற்பெயர் சுவாமிநாதன். திரைத்துறைக்காக சுருக்கி 'சாம்ஸ்' என பெயரை மாற்றிக்கொண்ட அவர், அப்படத்தில் ஜாவா சுந்தரேசனாக ஒரு சிறு கதாபாத்திரத்தில் வந்தாலும், பலராலும் ரசிக்கப்பட்டவராக மாறினார்.
தொடர்ந்த பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானார். ஜாவா சுந்தரேசன் கதாபாத்திரம் எந்தளவிற்கு பிரபலமானதோ அதேபோல், 'கருப்பசாமி குத்தகைதாரர்' படத்தில் வடிவேலு காமெடியில் 'நகைக்கடைகாரர் மகன்' என பேசும் வசனமும் பிரபலமானது.
இவர் தற்போது தனது பெயரை அடையாளமாக மாறியுள்ள ஜாவா சுந்தரேசன் என்ற பெயராக மாற்றிக்கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: சாம்ஸ் என்ற பெயரில் தான் பல வருடங்களாக பல படங்களில் நடித்து வந்துள்ளேன். இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் வந்த 'அறை எண் 305ல் கடவுள்' படத்தில் நான் நடித்த 'ஜாவா சுந்தரேசன்' கதாபாத்திரம் மிகவும் புகழ்பெற்று அந்தப் பெயர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டது.
எனவே மக்கள் விருப்பமே மகேசன் விருப்பமாக ஏற்று எனது பெயரை "ஜாவா சுந்தரேசன்" என்று மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளேன். "ஜாவா சுந்தரேசன்" என்ற கேரக்டரை உருவாக்கிய இயக்குனர் சிம்பு தேவனிடம் முறைப்படி அனுமதி பெற்றுக் கொண்டு அவரின் வாழ்த்துக்களோடு இனி நான் "ஜாவா சுந்தரேசன்" ஆக எனது திரைப்பயணத்தை தொடர்கிறேன். அனைவரும் வழக்கம்போல் தொடர்ந்து உங்கள் அன்பையும் ஆதரவையும் தந்து இனி என்னை "ஜாவா சுந்தரேசன்" என்றே அழைக்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.